ADDED : மே 17, 2024 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், தேசிய டெங்கு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு தலைமை வகித்தார். மாவட்ட உதவி மலேரியா அலுவலர் சண்முகம், நகராட்சி துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், முன்னிலை வகித்தனர்.
இதில் களப்பணி உதவியாளர், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் நகராட்சி துாய்மை பணியாளர்கள், டெங்கு நோய் பரப்பும் ஏடிஎஸ் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழித்திடவும், கொசுவினால் பரவும் நோய்களை தடுத்திடவும், நன்னீர் தேக்கி வைக்கும் பாத்திரங்களை துாய்மையாக பராமரிக்கவும், உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

