/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தர்மபுரி, கி.கிரி தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்

ADDED : ஏப் 13, 2024 10:48 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: லோக்சபா தேர்தலையொட்டி வரும், 19ல், ஓட்டளிக்க தகுதியுள்ள அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும்.
எனவே, அனைத்து நிறுவன உரிமையாளர்களும் தங்கள் தொழிலாளர்கள் ஓட்டளிக்க ஏதுவாக அவர்களுக்கு வரும், 19ல், சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். அவ்வாறு விடுப்பு வழங்கப்படவில்லையெனில், தொழிலாளர்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறை அலுவலர்களுக்கு புகாரை தெரிவிக்கலாம்.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தொழிலாளர் உதவி ஆணையர், மஞ்சள்நாதன் 99626 13849, தொழிலாளர் துணை ஆய்வாளர், ஞானசேகரன் 99947 99224, தொழிலாளர் உதவி ஆய்வர், மாயவன் 97153 66345 ஆகியோரையும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், தொழிலாளர் உதவி ஆணையர் மாதேஸ்வரன் 98429 08287, தொழிலாளர் உதவி ஆய்வர்கள் செந்தில்குமார் 94424 13438, தமிழ்செல்வன் 94434 76756 ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.