/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காவிரியாற்றில் நடுகல் கண்டெடுப்பு
/
காவிரியாற்றில் நடுகல் கண்டெடுப்பு
ADDED : மே 01, 2024 11:37 PM

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுரேஷ், முதுகலை ஆசிரியர் முருகன், வரலாற்று ஆசிரியர் கதிர் மற்றும் ஆசிரியர்கள், மஞ்சுகொண்டப்பள்ளி பஞ்., உட்பட்ட கிராமங்களுக்கு, புதிய மாணவர் சேர்க்கை மற்றும் இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க சென்றிருந்தனர்.
அப்போது, தெப்பக்குழி காவிரியாறில் தண்ணீர் மிகவும் குறைவாக சென்றதால், ஒரு நடுகல்லை ஆசிரியர்கள் கண்டுபிடித்தனர். இந்த நடுக்கல் முதலையுடன் போராடி உயிர் நீத்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் என தெரிய வந்தது.
இதுகுறித்து, ஓய்வுபெற்ற தர்மபுரி தொல்லியல் துறை இணை இயக்குனர் சுப்பிரமணியிடம் ஆசிரியர்கள் விளக்கம் கேட்டனர்.
அதற்கு, இத்தகைய முதலை குத்திப்பட்டான் நடுகல் தமிழகத்தில் இதுவரை கண்டெடுக்கப்பட்டதில்லை எனவும், இந்த நடுகல், 300 ஆண்டுகள் பழமையானது எனவும் அவர் தெரிவித்தார்.

