/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வட்டார குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
/
வட்டார குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
ADDED : ஜூன் 27, 2024 03:48 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், ஓசூர் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது.
ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி தலைமை வகித்தார். பி.டி.ஓ., குமரேசன், மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன், பணிகள் குழு தலைவி இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் பிரசன்னகுமாரி ஆகியோர், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்தும், குழந்தை திருமண சட்டம், 2006ன் படி, பெண்ணுக்கு, 18 வயது பூர்த்தியாகாமலும், ஆணுக்கு, 21 வயது பூர்த்தியாகாமலும் திருமணம் செய்யக்கூடாது என தெரிவித்தனர். குழந்தைகள் தொடர்பான பிரச்னைகள் இருந்தால், 1098 என்ற ஹெல்ப்லைனுக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக்கொண்டனர். பாதுகாப்பு அலுவலர் சுபாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.