/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குடிநீர் வினியோக பணி அதிகாரிகள் ஆய்வு கூட்டம்
/
குடிநீர் வினியோக பணி அதிகாரிகள் ஆய்வு கூட்டம்
ADDED : மே 30, 2024 12:53 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் வினியோக பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது.
குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், அரசு பள்ளி கட்டடங்கள் அனைத்து நிலைகளிலும் துாய்மைப்படுத்துதல் மற்றும் புனரமைத்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம், சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கலெக்டர் சரயு பேசுகையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளை துரிதப்படுத்த, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) ராமஜெயம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் மகாதேவன் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள், பி.டி.ஓ.,க்கள் கலந்து கொண்டனர்.