/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உடல் கருகி டிரைவர் பலி; கொலையா என விசாரணை
/
உடல் கருகி டிரைவர் பலி; கொலையா என விசாரணை
ADDED : மார் 03, 2025 06:46 AM
மகாராஜகடை; கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடையை அடுத்த பெரியதக்கேப்பள்ளியை சேர்ந்தவர் கார்த்திக், 30; டிரைவர். மனைவி, மகன், மகள் உள்ளனர். கார்த்திக்கிற்கு சொந்தமான விவசாய நிலம் போத்திநாயனப்பள்ளியில் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு விவசாய நிலத்துக்கு சென்ற கார்த்திக், அங்கேயே தங்கினார். மனைவியிடம் மொபைல் போனில் பேசியுள்ளார். கார்த்திக் மனைவி நேற்று காலை தொடர்பு கொண்ட போது, நீண்ட நேரமாகியும் அழைப்பை ஏற்கவில்லை.
பின்னர், விவசாய நிலத்துக்கு சென்றபோது, கார்த்திக் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். கொள்ளு செடிகளும் தீயில் எரிந்து காணப்பட்டன. மகாராஜகடை போலீசார் சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். முன்விரோதத்தில் கார்த்திக் கொலை செய்யப்பட்டாரா அல்லது நடந்தது தீ விபத்தா என, போலீசார் விசாரிக்கின்றனர்.