/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவியை மிரட்டும் வாலிபரை கைது செய்ய இ.கம்யூ., மறியல்
/
மாணவியை மிரட்டும் வாலிபரை கைது செய்ய இ.கம்யூ., மறியல்
மாணவியை மிரட்டும் வாலிபரை கைது செய்ய இ.கம்யூ., மறியல்
மாணவியை மிரட்டும் வாலிபரை கைது செய்ய இ.கம்யூ., மறியல்
ADDED : செப் 18, 2024 01:45 AM
மாணவியை மிரட்டும் வாலிபரை
கைது செய்ய இ.கம்யூ., மறியல்
ஓசூர், செப். 18-
தேன்கனிக்கோட்டையை சேர்ந்த, 18 வயது மாணவி, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., பயோ டெக் முதலாமாண்டு படிக்கிறார். அவரை கடந்த இரு ஆண்டுகளாக, சாரண்டப்பள்ளியை சேர்ந்த சுபாஷ், 25, காதலித்து வந்துள்ளார்.
பிரச்னையால், மாணவி தன் காதலை கைவிட்டார். இந்
நிலையில், கழுத்தில் கத்தியை வைத்து, தன்னை திருமணம் செய்ய சுபாஷ் மிரட்டுவதாக, தளி போலீசில் மாணவி புகார் செய்தார். போலீசார் நேற்று முன்தினம் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாணவி புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என, தேன்கனிக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் முன், அஞ்செட்டி சாலையில், இ.கம்யூ., மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லகுமைய்யா தலைமையில் கட்சியினர் மற்றும் மாணவியின் உறவினர்கள் நேற்று மதியம் மறியலில் ஈடுபட்டனர். தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக சுபாஷ் மீது வழக்குப்பதிந்து, அதற்கான நகல் மாணவியின் உறவினர்களிடம் வழங்கப்பட்டது.
தளி, இ.கம்யூ., -
எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், மாணவியை மிரட்டிய சுபாஷை கைது செய்து சிறையில் அடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார். கைது செய்வதாக போலீசார் உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்
பட்டது.

