/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கல்வியால் தான் சமுதாயத்தில் முன்னேற முடியும் கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அறிவுரை

ADDED : ஆக 16, 2024 01:22 AM
கிருஷ்ணகிரி, ''கல்வி, கற்றால்தான் சமுதாயத்தில், நாம் முன்னேற முடியும்,'' என, கிராம சபை கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம் இம்மிடிநாயக்கனப்பள்ளி பஞ்., சின்ன பேடப்பள்ளி கிராமத்தில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நேற்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசியதாவது:
கிராம பஞ்., நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், கிராம பஞ்.,த்தின் தணிக்கை அறிக்கை குறித்தும், துாய்மையான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் சேவை, இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல், தமிழ்நடு எளிமை படுத்தப்பட்ட பஞ்., கணக்கு, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், துாய்மை பாரத இயக்கம் மற்றும் ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. நம் மாவட்டத்தில் இளம் வயது திருமணத்தை தடுத்து, பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். கல்வி கற்றால்தான் சமுதாயத்தில் நாம் முன்னேற்றம் அடைய முடியும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, கலெக்டர் தலைமையில், அயோடின் உப்பு பயன்பாடு குறித்த உறுதிமொழியை, பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். முன்னதாக, கனவு இல்லம் திட்டத்தில் தலா, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 4 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார்.