/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கோடை வெப்பம் தாங்காமல் வாடமங்கலம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
/
கோடை வெப்பம் தாங்காமல் வாடமங்கலம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
கோடை வெப்பம் தாங்காமல் வாடமங்கலம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
கோடை வெப்பம் தாங்காமல் வாடமங்கலம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
ADDED : மே 05, 2024 01:54 AM
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வாடமங்கலம் கிராமத்தில், 95 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது.
கடும் வெயிலின் தாக்கத்தால், ஏரியில் தண்ணீர் வற்றி வருகிறது. குறைந்த அளவே தண்ணீர் உள்ளதாலும், வெப்பத்தின் தாக்குதலாலும் ஏரியில் உள்ள தண்ணீர் சூடாவதால், சிறிய மீன்கள் முதல் 6 கிலோ எடை உள்ள மீன்கள் செத்து மிதக்கிறது. இதுவரை நான்கு டன் அளவிற்கு மீன்கள் இறந்திருக்கலாம் என தெரிகிறது. மீன் பிடி குத்தகைதாரர்கள் இறந்த மீன்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து குத்தகைதாரர் ஈஸ்வரன் கூறியதாவது: வெயிலின் தாக்கத்தால் ஏரியில் தண்ணீர் குறைந்து வருகிறது. கே.ஆர்.பி. அணையிலிருந்து தண்ணீர் பாரூர் ஏரிக்கு வந்து, அதிலிருந்து சிறிதளவு தண்ணீர் வாடமங்கலம் ஏரிக்கு வந்தால் ஏரியில் இருக்கும் மீன்களை காப்பாற்றலாம்.
ஏரியில் இருக்கும் மீன்களை உடனடியாக பிடித்து, விற்பனை செய்யலாம் என்றால் மீன் பிடிப்பதற்கு கிலோவிற்கு, 25 ரூபாய் கூலி கொடுக்க வேண்டும். அதேபோல் மீன் கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் பராமரிப்பு செலவு கூட கிடைக்காமல் நஷ்டம் ஏற்படும் என்பதால், மீன் பிடிக்காமல் இருக்கிறோம். இவ்வாறு கூறினார்.