/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிறுமியரிடம் சில்மிஷம்; ஐந்து சிறுவர்கள் கைது
/
சிறுமியரிடம் சில்மிஷம்; ஐந்து சிறுவர்கள் கைது
ADDED : மார் 03, 2025 06:50 AM
ஓசூர் : ஓசூரில் சகோதரியரான இரு சிறுமியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாணவர் உட்பட ஐந்து சிறுவர்களை, போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு பள்ளியில், 13 வயது மாணவர், 14 வயதான மூன்று பேர் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றனர். இவர்களுக்கு, 15 வயது சிறுவன் நண்பன். இவர் படிப்பை பாதியில் நிறுத்தி, கட்டட வேலைக்கு சென்று வருகிறார்.
நேற்று முன்தினம், ஐந்து பேரும் அப்பகுதியில் கட்டட பணி நடந்து வரும் இடத்துக்கு, இரும்பு கம்பி திருட சென்றுள்ளனர். அப்போது அருகிலுள்ள ஒரு வீட்டில், 9 மற்றும் 13 வயது சகோதரியர் தனியாக விளையாடிக் கொண்டுஇருந்தனர்.
வீட்டில் யாருமில்லாததை கவனித்த சிறுவர்கள், சிறுமியரிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியர், பெற்றோரிடம் தெரிவித்தனர். ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் பெற்றோர் புகாரளித்தனர். வழக்கு பதிந்த போலீசார், ஐந்து பேரையும் கைது செய்தனர்.
கடந்த ஜனவரியில், 11 வயதான ஆறாம் வகுப்பு மாணவிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில், 9, 10 மற்றும் பிளஸ் 1 படிக்கும் மூன்று மாணவர்களை, ஓசூர் மகளிர் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.