/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தனியார் ஊழியரிடம் ரூ.5.54 லட்சம் மோசடி
/
தனியார் ஊழியரிடம் ரூ.5.54 லட்சம் மோசடி
ADDED : மே 16, 2024 09:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:ஓசூர், மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் அரவிந்தன், 28; பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த பிப்., 15 ல் இவரது மொபைலில் வந்த விளம்பரத்தை பார்த்தார். அதில் ஆன்லைன் பகுதிநேர வேலை என்றும், முதலீட்டிற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது-. இதை நம்பி, அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு, 5.54 லட்சம் ரூபாயை அனுப்பினார். அதன்பின், எந்த தகவலும் வராத நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அரவிந்தன், நேற்று முன்தினம் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

