/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் என கூறி தனியார் ஊழியரிடம் ரூ.6.07 லட்சம் மோசடி

ADDED : ஜூலை 24, 2024 10:34 PM
கிருஷ்ணகிரி:சூளகிரியை சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியரிடம், ஸ்டார் ரேட்டிங் கொடுத்தால் ஊதியம் எனக்கூறி, 6.07 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த தாசனபுரத்தை சேர்ந்தவர் சீதா, 31. ஓசூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது, மொபைல் எண்ணிற்கு கடந்த மே, 17 ல் ஒரு மெசேஜ் வந்தது. அதில் நாங்கள் அனுப்பும், 'லிங்க்'குகளிலுள்ள ேஹாட்டல்களுக்கு, 'பைவ் ஸ்டார் ரேட்டிங்' கொடுத்தால், ஊதியம் கிடைக்கும். அதில் முதலீடு செய்தால், பணம் இரட்டிப்பாகும், என இருந்தது.
அதை நம்பிய சீதா, அந்த, 'லிங்க்' மூலம் ஓட்டல்களுக்கு லைக் கொடுத்துள்ளார். அவரது வங்கி கணக்கிற்கு சிறிதளவு பணம் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர், 6.07 லட்சம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார். அதன் பின் சீதாவை தொடர்பு கொண்ட எண்கள் அனைத்தும், 'சுவிட்ச் ஆப்' ஆயின. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சீதா, இது குறித்து நேற்று முன்தினம் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.