/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாடிக்கையாளர் பெயரில் கடன் வாங்கி மோசடி 'பர்னிச்சர்' கடைக்காரர் போலீசில் ஒப்படைப்பு
/
வாடிக்கையாளர் பெயரில் கடன் வாங்கி மோசடி 'பர்னிச்சர்' கடைக்காரர் போலீசில் ஒப்படைப்பு
வாடிக்கையாளர் பெயரில் கடன் வாங்கி மோசடி 'பர்னிச்சர்' கடைக்காரர் போலீசில் ஒப்படைப்பு
வாடிக்கையாளர் பெயரில் கடன் வாங்கி மோசடி 'பர்னிச்சர்' கடைக்காரர் போலீசில் ஒப்படைப்பு
ADDED : ஏப் 07, 2024 04:02 AM
வாழப்பாடி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் தியாகராஜன், 45. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரில், 'பர்னிச்சர்' கடை வைத்துள்ளார். இவர் பொருட்கள் வாங்க வந்த மக்கள் பெயரில், கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக, 50க்கும் மேற்பட்டோர், தியாகராஜனை பிடித்து, நேற்று வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மணி மேகலை கூறியதாவது:
ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு, கடன் போட்டு மாதத்தவணையில் பணத்தை செலுத்தலாம் என, தியாகராஜன் தெரிவித்தார். கடனுக்கு ஆதார், வங்கி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டார். பின் கடன் வாங்க தகுதி இல்லை என கூறிவிட்டார். பின் பர்னிச்சர் பொருட்களை வாங்கவில்லை.
ஆனால் கடந்த மாதம், என் வங்கி கணக்கில் இருந்த பணத்தை தனியார் வங்கி எடுத்துக்கொண்டது. இதுகுறித்து விசாரித்ததில் என் ஆவணங்களை பயன்படுத்தி, வாங்காத பொருளுக்கு தியாகராஜன், 75,000 ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல் பேளூரில் கூலித்தொழிலாளி, விவசாயிகளான, மகேஸ்வரி, முருகன், தினேஷ், லட்சுமி, கார்த்தி, சக்தி, சத்யபிரியா உள்ளிட்டோரிடம், 35,000 முதல், 75,000 ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. 50க்கும் மேற்பட்டோரிடம் சுய உதவிக்குழு மூலம் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து தியாகராஜனிடம் கேட்டபோது, பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக தெரிவித்தார். பின் கடையை பூட்டிவிட்டு தியாகராஜன் தலைமறைவாக இருந்தார். ஆனால் நேற்று முன்தினம் இரவு, தியாகராஜன் குடும்பத்தோடு, வீட்டை காலி செய்து ராசிபுரத்துக்கு செல்ல முயன்றார். பாக்கப்பட்ட மக்கள், அவரை பிடித்துவிட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க, பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

