/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்த நிதி வழங்கல்
/
அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்த நிதி வழங்கல்
ADDED : ஏப் 25, 2024 04:51 AM
பாலக்கோடு: தர்மபுரி அடுத்த, சோமனஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்தக்கோரி, கிராம பொதுமக்கள் நிதி வழங்கினர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட சோமனஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு, சோமனஹள்ளி, மோதுகுலஹள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவர்கள் வருகின்றனர்.
இந்நிலையில், இந்த உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக மாற்ற, கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து, மோதுகுலஹள்ளியை சேர்ந்த கிராம மக்கள் சார்பில், பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, 10,500 ரூபாயை, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மங்கம்மாளிடம் வழங்கினர். நிகழ்ச்சியில், ஊர் முக்கியஸ்தர்கள் பெரியசாமி, காமாட்சி மோதுகுலஹள்ளி பஞ்., துணைத்தலைவர்
சின்னசாமி உடனிருந்தனர்.

