/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி பணம் பறித்த 3 பேர் கும்பல் கைது
/
ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி பணம் பறித்த 3 பேர் கும்பல் கைது
ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி பணம் பறித்த 3 பேர் கும்பல் கைது
ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி பணம் பறித்த 3 பேர் கும்பல் கைது
ADDED : மே 28, 2024 09:27 PM
ஓசூர்:ஓசூரில், ரியல் எஸ்டேட் அதிபரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த, 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்தவர் ஜான், 41. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஐ.டி.ஐ., அம்மன் நகரில் தங்கி, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த இரு ஆண்டுக்கு முன், மத்திகிரி சிப்பாய்பாளையத்தை சேர்ந்த பயாஸ்கான், 55, என்பவரிடம், 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கடந்த பிப்., 24 ல், 4.50 லட்சம் ரூபாயை திரும்ப கொடுத்தார். மீதி தொகைக்கு கால அவகாசம் கேட்டுள்ளார்.
இந்நிலையில், ஜானிடமிருந்து மீதி பணத்தை வசூல் செய்து தர, மத்திகிரி குசினிபாளையத்தை சேர்ந்த விஜய்மோகன், 43, என்பவரை பயாஸ்கான் தொடர்பு கொண்டார். தன் நண்பர்களுடன் சேர்ந்து, ஜானிடம் பணத்தை கேட்டு, விஜய்மோகன் தொந்தரவு செய்து வந்துள்ளார். கடந்த, 22 காலை, 10:30 மணிக்கு ஜானை, நவதி மாரியம்மன் கோவில் அருகே வருமாறு விஜய்மோகன் அழைத்துள்ளார். அங்கு தன் நண்பர்களுடன் காத்திருந்த விஜய்மோகன், ஜானிடம் மீதி தொகையை தரக்கேட்டு கையால் தாக்கி, கத்தி முனையில், அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த, 10,000 ரூபாயை பறித்தார்.
இது தொடர்பாக நேற்று முன்தினம் ஜான் புகார்படி, மத்திகிரி போலீசார், விஜய்மோகன் மற்றும் பழைய மத்திகிரி ராயல் டவுனை சேர்ந்த சதீஷ், 36, குசினிபாளையம் கருணாகரன், 48, ஆகியோரை கைது செய்தனர். கைதான சதீஷ் மீது, மத்திகிரி போலீசில், கூட்டு கொள்ளையில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.