/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஹெல்மெட் விழிப்புணர்வு பர்கூரில் டூவீலர் பேரணி
/
ஹெல்மெட் விழிப்புணர்வு பர்கூரில் டூவீலர் பேரணி
ADDED : மே 02, 2024 11:21 AM
கிருஷ்ணகிரி: பர்கூரில், போலீசாருடன் இணைந்து, மோட்டார் சைக்கிள் பழுதுபார்ப்போர் நலச்சங்கத்தினர் இணைந்து, ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, டூவீலர் பேரணி நடத்தினர். பர்கூரில் நடந்த டூவீலர் பேரணியை இன்ஸ்பெக்டர் வளர்மதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பர்கூர் தாலுகா அலுவலகத்தில் துவங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று பர்கூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், விபத்தை தடுக்க விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் பொதுமக்களுக்கு வழங்கினர். ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, டூவீலர்களில் சென்றவர்கள் பதாகைகள் ஏந்தியவாறு சென்றனர்.
அதேபோல கிருஷ்ணகிரியிலும் ஹெல்மெட் அவசியம் குறித்த டூவீலர் பேரணி நடந்தது. மோட்டார் சைக்கிள் பழுது பார்ப்போர் சங்க தலைவர் நடராஜன், செயலாளர் ராஜா, பொருளாளர் விஜயகுமார் உட்பட, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பொது அமைதிக்கு தொல்லை போலீசில் சிக்கிய ஓசூர் ரவுடி
ஓசூர்: ஓசூர், மத்திகிரி ஸ்டேஷன் எஸ்.ஐ., கார்த்திகேயன் மற்றும் போலீசார், மத்திகிரி பஸ் ஸ்டாண்ட் அருகே ரோந்து சென்றனர். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக, ஓசூர் கொத்துாரை சேர்ந்த மஞ்சுநாத், 26, என்பவரை கைது செய்தனர். இவர் மீது, மத்திகிரி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கிணற்றில் விழுந்த மாணவி பலி
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, கல் குமாரம்பட்டியை சேர்ந்த வினோத் என்பவரின் மகள் சுப்ரியா, 16; இவர் குன்னத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை அவரது விவசாய நிலத்தில், தக்காளி தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருக்கும் போது, கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதையறியாத அவரது பெற்றோர் தேடி வந்தனர்.
தண்ணீர் பாய்ச்ச சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை என்ற சந்தேகத்தின் படி, 50 அடி ஆழ விவசாய கிணற்றிலுள்ள நீரை, ஊத்தங்கரை தீயணைப்பு துறை உதவியுடன் வடித்து பார்த்தபோது, சிறுமி சடலமாக கிடந்தார். சாமல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

