/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கழிவு நீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய ஓசூர் மேயர் உத்தரவு
/
கழிவு நீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய ஓசூர் மேயர் உத்தரவு
கழிவு நீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய ஓசூர் மேயர் உத்தரவு
கழிவு நீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய ஓசூர் மேயர் உத்தரவு
ADDED : ஆக 06, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 4, 6 மற்றும் 35வது வார்டுக்கு உட்பட்ட சின்ன எலசகிரி, அனுமந்த் நகர், கே.சி.சி., நகர், வ.உ.சி., நகர் ஆகிய பகுதிகளில், மாநகர மேயர் சத்யா ஆய்வு செய்தார். அப்போது, ஆழ்துளை கிணறு பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும். கழிவு நீர் கால்வாய் அடைப்புகளை சரிசெய்ய வேண்டும்.
கொசு மருந்து அடிக்க வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகளை அறிவுறுத்தினார். ஆய்வின்போது, துணை மேயர் ஆனந்தய்யா, செயற்பொறியாளர் ராஜாராம், மாநகர நல அலுவலர் பிரபாகரன், கவுன்சிலர்கள் ஆறுமுகம், தேவி மாதேஷ், மம்தா சந்தோஷ், தி.மு.க., பகுதி செயலாளர் திம்மராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.