/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சொத்து தகராறில் மனைவியை தாக்கிய கணவனுக்கு 10 ஆண்டு சிறை
/
சொத்து தகராறில் மனைவியை தாக்கிய கணவனுக்கு 10 ஆண்டு சிறை
சொத்து தகராறில் மனைவியை தாக்கிய கணவனுக்கு 10 ஆண்டு சிறை
சொத்து தகராறில் மனைவியை தாக்கிய கணவனுக்கு 10 ஆண்டு சிறை
ADDED : ஏப் 25, 2024 04:51 AM
தர்மபுரி: தர்மபுரியில், சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய, கணவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த மருவீட்டுபள்ளத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 52; அவர் மனைவி பீரீ, 42; கடந்த, 2012 ல் கணவர் கோவிந்தராஜ் குடும்பத்தார் சொத்து பிரித்ததில், கணவருக்கு பாரபட்சம் காட்டியதாக கூறியுள்ளார். இது குறித்து, பீரீயின் சகோதரர் பீரனும் கேட்டுள்ளார். இதனால், கோவிந்தராஜ் அவருடைய தம்பி ஜெயராமன், 42, தங்கை கவிதா, 50, ஆகியோர் பீரீ, பீரனை, கயிற்றால் கட்டி வைத்து தாக்கினர். பாப்பாரப்பட்டி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து, கோவிந்தராஜ், ஜெயராமன், கவிதா ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு, தர்மபுரி விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி சுரேஷ் தீர்ப்பளித்தார்.
அதில், கோவிந்தராஜிக்கு, 10 ஆண்டு சிறை, 20,000 ரூபாய் அபராதம், ஜெயராமனுக்கு, 7 ஆண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம், கவிதாவிற்கு, 2 ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் கல்பனா
ஆஜராகினார்.

