/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எப்போதும் மக்கள் தொண்டனாக இருப்பேன் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
/
எப்போதும் மக்கள் தொண்டனாக இருப்பேன் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
எப்போதும் மக்கள் தொண்டனாக இருப்பேன் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
எப்போதும் மக்கள் தொண்டனாக இருப்பேன் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
ADDED : ஏப் 07, 2024 04:02 AM
எப்போதும் மக்கள் தொண்டனாக இருப்பேன்
கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
கருமந்துறை: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு, நேற்று, ஆத்துார், ஏற்காடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கல்வராயன்மலை, மேல்நாடு, கீழ்நாடு, வடக்குநாடு, தெற்கு நாடு, கருமந்துறை பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது: மலைவாழ் மக்கள் நலனில் அக்கறை கொண்டது, அ.தி.மு.க., ஆட்சி. மலைவாழ் மக்களின் கூட்டுறவு கடன், 14 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து திட்டங்களையும், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., செய்து கொடுத்தார். மலைவாழ் மக்கள், 5,000 பேருக்கு உதவி தொகையை, இ.பி.எஸ்., வழங்கினார். அவற்றை, தி.மு.க., அரசு எந்த காரணமுமின்றி நிறுத்திவிட்டது. பொய் வாக்குறுதிகளை கொடுத்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பேசியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை மலைவாழ் மக்களின் நலனுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளேன். 150 பேருக்கு என் சொந்த செலவில் திருமணம் நடத்தி வைத்துள்ளேன். அவர்கள் வீடுகளில் நான் தொண்டனாக, நண்பனாக, அண்ணனாக இருந்து அவர்களுக்கு மக்கள் சேவை பணிபுரிந்து வருகிறேன். என்னை வெற்றி பெறச்செய்தால், சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன், சேர்வராயன், ஏற்காடு மலை கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்வதற்கு முன்னுரிமை அளிப்பேன். எப்போதும் மக்களுக்கு சேவை செய்யும் தொண்டனாகவே இருப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், ஏற்காடு சித்ரா, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சின்னதம்பி, ஒன்றிய செயலர்களான, முருகேசன், மோகன், தே.மு.தி.க., மாவட்ட செயலர் இளங்கோவன், புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.

