/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் அ.தி.மு.க.,வினர் தண்ணீர் பந்தல் திறப்பு

ADDED : மே 02, 2024 11:16 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாட்டி வதைக்கும் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் அ.தி.மு.க.,வினர் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறந்து வருகின்றனர். அதன்படி நேற்று காவேரிப்பட்டணம் சந்தைப்பேட்டை கூட்ரோடு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., தண்ணீர் பந்தலை துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, ஜூஸ், இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். தொடர்ந்து கிருஷ்ணகிரி பழையபேட்டையிலும், அ.தி.மு.க., சார்பில் நடந்த தண்ணீர்பந்தலை திறந்து வைத்தார்.
மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார். முன்னாள் எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம். ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி, காவேரிப்பட்டணம் பேரூர் செயலாளர் விமல், மாவட்ட கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.