/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அதியமான் கல்லுாரியில் ஸ்பிரிண்ட் திட்டம் இந்திய-தென்கொரிய பிரதிநிதிகள் துவக்கம்
/
அதியமான் கல்லுாரியில் ஸ்பிரிண்ட் திட்டம் இந்திய-தென்கொரிய பிரதிநிதிகள் துவக்கம்
அதியமான் கல்லுாரியில் ஸ்பிரிண்ட் திட்டம் இந்திய-தென்கொரிய பிரதிநிதிகள் துவக்கம்
அதியமான் கல்லுாரியில் ஸ்பிரிண்ட் திட்டம் இந்திய-தென்கொரிய பிரதிநிதிகள் துவக்கம்
ADDED : மே 25, 2024 02:42 AM
ஓசூர்: -ஓசூர், அதியமான் பொறியியல் கல்லுாரியில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான, ஸ்பிரிண்ட் திட்டத்தை இந்திய-தென்கொரிய பிரதிநிதிகள் துவக்கி வைத்தனர்.
அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் ரங்கநாத் வரவேற்றார். மாணவர்களின் கல்வி, தொழில்சார் வளர்ச்சியில் சர்வதேச பயிற்சியின் மாற்றத்தக்க தாக்கத்தை வலியுறுத்தி, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன செயலாளர் டாக்டர் லாசியா தம்பிதுரை பேசினார்.
ஸ்பிரிண்ட் திட்ட இயக்குனர் தீபக் பலஷா, திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விளைவுகள் பற்றி விளக்கினார். கல்வி முன்னேற்றம் மற்றும் உலகளாவிய இன்டர்ன்ஷிப் அனுபவங்களின் நன்மைகள் பற்றி, திட்ட தலைவர் ஸ்ரீதர் சரஸ்வதி மற்றும் இயக்குனர் மதுசூதன் ஆகியோர் பேசினர்.
தென் கொரியா துாதுக்குழுவில் வந்திருந்த காலிஸ் இன்க் என்ற நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி கிம் கியுரே பேசுகையில்,'' உலகில் செழிக்க தேவையான திறன்களுடன் மாணவர்களை தயார்படுத்துவதில், வெளிநாடுகளில் உள்ள இன்டர்ன்ஷிப் முக்கியமானது. இது போன்ற அனுபவங்கள் அவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதுடன் மட்டு மின்றி, கலாசார புரிதலையும் வளர்க்கின்றன,'' என்றார்.
முதன்மை நிர்வாக அதிகாரி யூ.சுகோ பேசுகையில், ''இந்திய மற்றும் தென் கொரிய கல்வி நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு, புதுமை மற்றும் மேம்பாட்டிற்கான புதிய வழிகளை திறக்கிறது,'' என்றார். வெங்கடேசன் செல்வம் நன்றி கூறினார்.

