/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இடம் பெயர்வோர் ஆதரவு மையம் திறப்பு
/
இடம் பெயர்வோர் ஆதரவு மையம் திறப்பு
ADDED : ஆக 09, 2024 03:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் ஒன்றியம், பாகலுார் பஞ்.,ல், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம், இடம் பெயர்வோர் ஆதரவு மையம் அமைக்கப்-பட்டுள்ளது.
வேலை கிடைத்து தங்குமிடம் தேடி வரும் பெண்கள், 30 நாட்களுக்கு இந்த மையத்தில் இலவசமாக தங்கி கொள்ளலாம். 50 பேர் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மையத்தில், கட்டண உணவு, பல்பொருள் அங்காடி போன்ற வச-திகள் செய்யப்பட்டுள்ளன. இம்மையத்தை, மாவட்ட கலெக்டர் சரயு நேற்று திறந்து வைத்தார். வாழ்ந்து காட்டுவோம் திட்ட உதவி இயக்குனர் ரமேஷ் கிருஷ்ணன், பி.டி.ஓ.,க்கள் பாலாஜி, சாந்தலட்சுமி, பாகலுார் பஞ்., தலைவர் ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.