/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
/
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
ADDED : ஏப் 28, 2024 04:27 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில், தி.மு.க., சார்பில் நேற்று தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
கிருஷ்ணகிரி பழையபேட்டை, ரவுண்டானா பகுதிகளில் கிருஷ்ணகிரி நகர, தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. நகர செயலாளர் நவாப், நகராட்சி தலைவர் பரிதாநவாப் தலைமை வகித்தனர். கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தண்ணீர் பந்தலை துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.
காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட் எதிரில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி செந்தில்குமார், தி.மு.க., நகர செயலாளர் பாபு தலைமை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, மோர், வெள்ளரி, ஜூஸ், ஆகியவற்றை வழங்கினார். மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், ஒன்றிய குழு துணை தலைவர் சசிகலா தசரா மற்றும் டவுன் பஞ்., வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* தி.மு.க., சார்பில் போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்டில் பர்கூர்
எம்.எல்.ஏ., மதியழகன் தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

