/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காய்ச்சல் தடுப்பு ஆய்வு கூட்டம்
/
காய்ச்சல் தடுப்பு ஆய்வு கூட்டம்
ADDED : ஆக 30, 2024 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஆக. 30-
ஓசூர் மாநகராட்சியில், மழைக்கால காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். மாநகர நல அலுவலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். இதில், மழைக்கால காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆயத்த பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மருத்துவ அலுவலர்கள், துப்புரவு அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.