/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நெடுஞ்சாலையில் போதை நபர் வாகனங்களை நிறுத்தி அட்டகாசம்
/
நெடுஞ்சாலையில் போதை நபர் வாகனங்களை நிறுத்தி அட்டகாசம்
நெடுஞ்சாலையில் போதை நபர் வாகனங்களை நிறுத்தி அட்டகாசம்
நெடுஞ்சாலையில் போதை நபர் வாகனங்களை நிறுத்தி அட்டகாசம்
ADDED : மே 18, 2024 01:24 AM

ஓசூர்:கர்நாடகா - தமிழகம் எல்லையான அத்திப்பள்ளியில், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் அம்மாநில மதுபானக் கடைகள் ஏராளமான உள்ளன.
தமிழக எல்லையான ஓசூர் பகுதியைச் சேர்ந்த மதுப்பிரியர்கள், கர்நாடகாவில் குறைந்த விலைக்கு மது கிடைப்பதால், அங்கு சென்று மது அருந்துவது வழக்கம்.
அத்திப்பள்ளியில் மது வாங்கி அருந்தும் 'குடி'மகன்கள், போதை தலைக்கேறி, ஆபத்தை உணராமல் தேசிய நெடுஞ்சாலையைக் கடப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில், போதை தலைக்கேறிய ஒருவர், ஒருபடி மேலே சென்று, தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை மறித்து ஆட்டம் போட்டார். லாரியை தடுத்து நிறுத்தி அதன் முன்னால் நிற்பது, கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு குறுக்கே அங்கும், இங்கும் தள்ளாடியபடி நடந்து செல்வது என, அட்டகாசத்தில் ஈடுபட்டார். இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
போதை ஆசாமியின் செயலால், லாரியை ஓட்டிச் செல்ல முடியாமல், சிறிது நேரம் டிரைவர் சாலையின் மையப்பகுதியில் காத்திருந்தார். இவர் போன்ற போதை நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

