/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஜல்ஜீவன் பைப் லைனில் நீர் உறிஞ்சும் மர்ம நபர்கள்
/
ஜல்ஜீவன் பைப் லைனில் நீர் உறிஞ்சும் மர்ம நபர்கள்
ADDED : ஏப் 03, 2024 02:12 AM
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி
மாவட்டம், மத்துார் பஞ்.,க்கு உட்பட்ட, மத்துார் கீழ்வீதியில், மத்திய
அரசின் ஜல்ஜீவன் திட்டத்தை அமல்படுத்தும் வகையில், 15வது நிதிக்குழு
மான்ய திட்டத்தில், 4.47 லட்சம் மதிப்பீட்டில் புதிய பைப்லைன் அமைத்து,
80 வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த, 2
மாதங்களாக கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், இணைப்பு
வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கு தேவையான அளவு, தண்ணீர் கிடைக்காமல்
குறைந்தளவே தண்ணீர் கிடைத்து வருகிறது.
இந்த திட்டத்தில்
அமைக்கப்பட்ட பைப்லைனிலிருந்து ஒரு சில நபர்கள் இரவில் குழி தோண்டி,
பெரிய பைப்புகளை புதைத்து, தண்ணீரை உறிஞ்சி வருகின்றனர். இதனால்
அனைவருக்கும் இப்பகுதியில் தண்ணீர் கிடைக்காமல் கடும்
அவதிக்குள்ளாகி வருகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

