/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் வரை மெட்ரோ ரயில் பாதை எதிர்த்து கன்னட அமைப்பினர் போராட்டம்
/
ஓசூர் வரை மெட்ரோ ரயில் பாதை எதிர்த்து கன்னட அமைப்பினர் போராட்டம்
ஓசூர் வரை மெட்ரோ ரயில் பாதை எதிர்த்து கன்னட அமைப்பினர் போராட்டம்
ஓசூர் வரை மெட்ரோ ரயில் பாதை எதிர்த்து கன்னட அமைப்பினர் போராட்டம்
ADDED : செப் 01, 2024 03:20 AM
ஓசூர்: கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வழியாக, தமிழக எல்லை-யான ஓசூர் வரை, மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்தும், கர்நாடக மாநிலம் ஆனைக்கல் தாலு-காவில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதை கண்-டித்தும், அம்மாநில எல்லையான அத்திப்பள்ளி ஆர்ச் அருகே, சாலை மறியல் போராட்டம் நேற்று மதியம் நடந்தது.
கன்னட சலுவளி, கன்னட ஜாக்ருதி வேதிகே, கன்னட கடிநாடு வேதிகே அமைப்புகள் சார்பில், அதன் தலைவர்கள் முறையே வாட்டாள் நாகராஜ், மஞ்சுநாத் தேவா, சோனி நாகராஜ் தலைமை வகித்தனர். இதில் கலந்து கொண்ட, 50க்கும் மேற்பட்டோரை
கர்நாடகா மாநில போலீசார் கைது
செய்தனர்.
மறியல் குறித்து வாட்டாள் நாகராஜ் கூறியதாவது: ஓசூரை, கர்நா-டகாவுடன் இணைக்கும் வரை, மெட்ரோ ரயில் பாதை அமைப்-பதை அனுமதிக்க மாட்டோம். மீறி அமைத்தால், கர்நாடகா முழு-வதும் போராட்டம் நடத்தப்படும். ஓசூர், ஊட்டி, தாளவாடியை கர்நாடகாவுடன் இணைக்க, 40 ஆண்டுகளாக போராடி வரு-கிறோம். மேகதாது அணையால் தமிழகமும் பயன்பெறும். மேகதாது விவகாரத்தில் தன் நிலைப்பாட்டை தமிழக அரசு மாற்றி கொள்ள வேண்டும். கர்நாடகாவில் அதிகரித்துள்ள போதை பொருட்கள் புழக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.