/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தென்பெண்ணையாற்றில் கர்நாடகா கழிவுநீர் கலப்பு கே.ஆர்.பி., அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

ADDED : மே 16, 2024 04:01 AM
கிருஷ்ணகிரி: கர்நாடகாவிலிருந்து தென்பெண்ணையாற்றில் அதிகளவில் நீர்வரத்தாகும்போது, அம்மாநில தொழிற்சாலைகளின் சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவுநீர் மற்றும் குடியிருப்புகளின் கழிவுநீர் திறந்து விடப்படும். அந்த தண்ணீர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும்போது, கடும் துர்நாற்றத்துடன், ரசாயன நுரையுடன் வரும். அதுபோல் தற்போது வந்துள்ள தண்ணீர், ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் தேக்கப்பட்டு, கடந்த, 2 நாட்களாக, தென்பெண்ணையாற்றில் வினாடிக்கு, 560 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது. இந்த நீரும், ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையாலும், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று காலை வினாடிக்கு, 1,126 கன அடி நீர்வரத்து இருந்தது.
கடும் துர்நாற்றத்துடன் கழிவுநீர் கலந்து பச்சை நிறத்தில் வந்த நீரால், அணையில் ஒன்றரை கிலோ வரை வளர்ந்திருந்த மீன்கள், 3 டன் அளவிற்கு செத்து மிதக்கின்றன. இதனால் மீனவர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலத்திலிருந்து வரும் கழிவுநீரை முறையாக சுத்திகரித்து தென்பெண்ணை ஆற்றில் விட வேண்டும். இல்லையென்றால் வரும் காலங்களில் கே.ஆர்.பி., அணையில் மீன்களை வளர்க்க முடியாது என்றும், இப்பகுதியில் விவசாயம் கேள்விக்குறியாகும் என்றும், விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கே.ஆர்.பி., அணையின் இடது மற்றும் வலதுபுற வாய்க்காலில் வினாடிக்கு, 12 கன அடி நீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 40.20 அடியாக நீர்மட்டம் இருந்தது.