/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தின அமைதி பேரணி
/
கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தின அமைதி பேரணி
ADDED : ஆக 08, 2024 05:44 AM
கிருஷ்ணகிரி: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நேற்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், அமைதி பேரணி நடந்தது. கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். பேரணி, பெங்களூரு சாலை வழியாக, ராயக்-கோட்டை மேம்பாலம் அருகே கருணாநிதி சிலை அருகே முடிந்-தது. அங்குள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரி-யாதை செலுத்தப்பட்டது.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செங்குட்டுவன், நரசிம்மன், கிருஷ்ணமூர்த்தி, மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி நாராயணசாமி, மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்-திரி கடலரசுமூர்த்தி,
சந்திரன், நகர செயலாளர் நவாப், நகரமன்ற தலைவர் பரிதா-நவாப் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஓசூர் மாநகர, தி.மு.க., சார்பில், ஓசூர் தாலுகா அலுவலக சாலையிலுள்ள அண்ணாதுரை சிலைக்கு கீழே, கருணாநிதி உருவ படம் வைக்கப்பட்டு, மாநகர செயலாளர் மேயர் சத்யா தலை-மையில், கட்சியினர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீ-ரப்பா, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, பகுதி செயலாளர்கள் வெங்கடேஷ், ராமு, திம்மராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
* ஊத்தங்கரை ரவுண்டானாவில் தி.மு.க., சார்பில், கருணாநிதி உவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் பார்த்திபன் தலைமை வகித்தார்.
* காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில், கிழக்கு மாவட்ட, தி.மு.க., அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணைத்தலைவர் செந்-தில்குமார் தலைமையில் கட்சியினர், கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தர்மபுரியில், நகர, தி.மு.க.. சார்பில் நடந்த அமைதி பேரணிக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமை வகித்தார். நகர செயலாளர் நாட்டான் மாது முன்னிலை வகித்தார். தர்மபுரி டவுன் ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகி-லிருந்து, 4 ரோடு, அண்ணாதுரை சிலை வரை பேரணி சென்றது. கருணாநிதி உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இதில், நகராட்சி சேர்மன் லட்சுமி, அவைத்த-லைவர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
* அரூர் அடுத்த பொன்னேரி பஞ்.,ல், அரூர் கிழக்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் சந்திர-மோகன் தலைமையில், கருணாநிதி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.