/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மக்கள் பிரச்னைகளை நேரில் வந்து தீர்ப்பேன் கிருஷ்ணகிரி அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
/
மக்கள் பிரச்னைகளை நேரில் வந்து தீர்ப்பேன் கிருஷ்ணகிரி அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
மக்கள் பிரச்னைகளை நேரில் வந்து தீர்ப்பேன் கிருஷ்ணகிரி அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
மக்கள் பிரச்னைகளை நேரில் வந்து தீர்ப்பேன் கிருஷ்ணகிரி அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
ADDED : ஏப் 05, 2024 01:23 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி,
லோக்சபா தொகுதி வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து, மத்துார்
ஒன்றியத்தில் அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார்
எம்.எல்.ஏ., பிரசாரத்தை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, வேட்பாளர்
ஜெயபிரகாஷ், மத்துார், சிவம்பட்டி, தர்மதோப்பு, கண்ணன்டஹள்ளி,
மாடரஹள்ளி, உள்ளிட்ட, 8 பஞ்.,க்கு உட்பட்ட, 50க்கும் மேற்பட்ட
கிராமங்களில் பிரசாரம் செய்து பேசியதாவது:
தி.மு.க., பொய்யிலே
பிறந்து, பொய்யிலே வளர்ந்த கட்சி. காலம் காலமாக, கருணாநிதி
குடும்பத்தினர், தமிழகத்தை வஞ்சித்தனர். அதேபோல, காங்.,
கட்சியிலும் குடும்ப ஆதிக்கத்தால், அந்த கட்சியும், இன்று இடம்
தெரியாமல் மறைந்து வருகிறது. ஆனால், அ.தி.மு.க.,வை தோற்றுவித்த,
எம்.ஜி.ஆர்., மற்றும் வளர்த்த ஜெயலலிதா பாதையில், பொதுச்செயலாளர்
இ.பி.எஸ்., துணிச்சலாக, இன்று கட்சியை வளர்க்கிறார். மண்ணின்
மைந்தர்களாக களத்தில் நின்று, குடிநீர், கழிவுநீர் கால்வாய் முதல்,
ரயில், பல்நோக்கு கட்டடங்கள், மேம்பாலம் வரை உங்கள் தேவையறிந்து
செயல்படுத்தப்படும். மாதம் ஒருமுறையாவது மக்களை நேரில்
சந்தித்து, குறைகளை கேட்பேன். என்னை வெற்றி பெற செய்தால், உங்கள் குரலாக
நாடாளுமன்றத்தில் நான் பேச முடியும். எனக்கு வாய்ப்பளியுங்கள்,
மத்திய அரசிடம் உங்கள் கோரிக்கைகளை கேட்டு பெற்று தருகிறேன்.இவ்வாறு, அவர் பேசினார்.
எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

