/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கள்ளச்சாராயம் பதுக்கிய வாலிபருக்கு 'குண்டாஸ்'
/
கள்ளச்சாராயம் பதுக்கிய வாலிபருக்கு 'குண்டாஸ்'
ADDED : ஆக 08, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார், 28; இவர் கடந்த மாதம், விற்பனைக்கு கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜோசப் பாதம் பரிந்துரை படி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, கள்ளச்சாராயம் பதுக்கிய விஜயகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதற்கான நகல் சேலம் மத்திய சிறையிலுள்ள விஜயகுமாருக்கு வழங்கப்பட்டது.