/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நில அளவை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
நில அளவை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : டிச 10, 2024 01:36 AM
நில அளவை அலுவலர்கள்
உள்ளிருப்பு போராட்டம்
அரூர், டிச. 10-
அரூர் தாலுகா அலுவலகத்தில், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், நில அளவை களப்பணியாளர்களின், 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
கோட்ட துணைத்தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். இதில், நாமக்கல்லில் கடந்த, நவ., 24ல் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தின் முடிவின்படி, வரும், 19ல், ஒரு நாள் அடையாள தற்செயல் விடுப்பு போராட்டமும், 2025 ஜன., 22 முதல், 23 வரை, 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
* தர்மபுரி தாசில்தார் அலுவலகம் முன், நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. கோட்ட செயலாளர் சின்னராசு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் பிரபு, பொருளாளர் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
* பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்திற்கு, அரூர் கோட்ட பொருளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில் வட்ட துணை ஆய்வாளர் ஜெயசீலன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.