/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மழையால் குறைந்த வெயிலின் தாக்கம்
/
மழையால் குறைந்த வெயிலின் தாக்கம்
ADDED : மே 22, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை, வெயிலின் தாக்கம் குறைந்து, வெப்பம் அதிகமாக இருந்தது. பிற்பகலில் வானம் மேகமூடத்துடன் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கே.ஆர்.பி., அணைக்கு நேற்று, 353 கன அடியாக நீர்வரத்து இருந்தது. இடது மற்றும் வலது புற வாய்க்கால் மூலம், 12 கன அடிநீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 42.80 அடியாக நீர்மட்டம் இருந்தது.

