/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
3ம் கட்ட நீச்சல் பழகுனருக்கு சான்றிதழ்
/
3ம் கட்ட நீச்சல் பழகுனருக்கு சான்றிதழ்
ADDED : மே 10, 2024 02:42 AM
தர்மபுரி;தர்மபுரி நீச்சல் குளத்தில், 3ம் கட்ட நீச்சல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.தர்மபுரி அடுத்த, செந்தில்நகரிலுள்ள அரசு ராஜாஜி நீச்சல்குளத்தில், 3ம் கட்ட கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடந்து வந்தன.
இதில், மாணவர்கள், மாணவியர் மற்றும் பொதுமக்கள் என, பலரும் நீச்சல் பழகினர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தர்மபுரி பிரிவு சார்பாக இவர்களுக்கு பல்வேறு நீச்சல் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது. காலை முதல் மாலை வரை, ஒவ்வொரு பிரிவாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது. நேற்றுடன், 3ம் கட்ட பயிற்சி நிறைவடைந்த நிலையில், பயிற்சியில் பங்கேற்ற அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதை, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி வழங்கினார். நிகழ்ச்சியில், நீச்சல்குள பாதுகாப்பு அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.