/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து குறைவு
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து குறைவு
ADDED : ஆக 13, 2024 05:45 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பல இடங்களில் கன மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று நீர்வரத்து குறைந்-துள்ளது. கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம், 1,073 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில் நேற்று, 810 கன அடியாக குறைந்துள்ளது. அதேபோல், அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 1,140 கன அடிநீர் திறக்கப்பட்ட நிலையில் நீர்வரத்து குறைவால், 563 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணை நீர்-மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 50.70 அடியாக இருந்தது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்ச-மாக நெடுங்கல்லில், 123.20 மி.மீ., மழை பதிவாகியது. அதேபோல், போச்சம்பள்ளி, 97, பெனுகொண்டாபுரம், 95.20, கிருஷ்ணகிரி, 76.20, பாரூர், 74, கே.ஆர்.பி., அணை, 73, ஊத்-தங்கரை, 49, தேன்கனிக்கோட்டை, 47, ஓசூர், 32.90, பாம்பாறு அணை, 30, ராயக்கோட்டை, 26, கெலவரப்பள்ளி அணை, 18, தளி, சின்னாறு அணை, 10, அஞ்செட்டி, 3.40, சூளகிரி, 3, என மொத்தம், 767.90 மி.மீ., மழையும், சராசரியாக, 47.99 மி.மீ., மழையும் பதிவாகியது. நேற்று மதியம் வரை, கிருஷ்ணகிரியில் கடும் வெப்பம் வாட்டி வந்தது.

