/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சமூகசேவகர் வெட்டிக் கொலை ஒருவர் கைது; இருவருக்கு வலை
/
சமூகசேவகர் வெட்டிக் கொலை ஒருவர் கைது; இருவருக்கு வலை
சமூகசேவகர் வெட்டிக் கொலை ஒருவர் கைது; இருவருக்கு வலை
சமூகசேவகர் வெட்டிக் கொலை ஒருவர் கைது; இருவருக்கு வலை
ADDED : ஆக 17, 2024 03:55 AM
ஓசூர்: ஓசூர் அருகே சமூக சேவகர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், ஒருவரைபோலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா சின்ன பேளகொண்டப்-பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ்,68; விவசாயி. சமூக சேவகர். இவர் நேற்று முன்தினம் மாலை மத்திகிரி கால்நடை பண்ணை அருகில் ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் தன் பேரன் வேலு,18, என்பவருடன் மொபட்டில் சென்ற போது பைக்கில் வந்த, 3 பேர் கொண்ட கும்பல் முனிராஜை வெட்டிக் கொன்-றனர்.
அதில், முனிராஜை அதே ஊரை சேர்ந்த நாகராஜ், 55, அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், நாகராஜ், முனிராஜ் இருவ-ருக்குமிடையே முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக முனிராஜ், ஓசூர் டி.எஸ்.பி., பாபு பிரசாந்திடம் கடந்த, ஆக.,14ல் புகாரளித்துள்ளார்.
அதன்படி நாகராஜை போலீசார் கைது செய்ய சென்றபோது
கத்தியை, தன் கழுத்தில்
வைத்து தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியதால் போலீசார் அவரை கைது செய்யாமல் திரும்பினர். நாகராஜின் சகோதரர் சுப்பிரமணி, 42, சகோதரி லட்சுமி, 56, ஆகியோரிடம்
விசாரித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முனிராஜ் தன் பேரன் வேலுவுடன் வீட்டிற்கு சென்றநேரத்தில் தான், நாகராஜ் மற்றும் 2 பேர் சேர்ந்து முனிராஜை வெட்டிக் கொன்றது தெரிந்தது.  இந்த கொலை தொடர்பாக, நாகராஜை கைது செய்த போலீசார், மேலும்  இருவரை தேடி வருகின்றனர்.

