ADDED : ஏப் 28, 2024 02:09 AM

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள குனிக்கல்லை சேர்ந்தவர் சதீஷ், 34. இவர் மீது, 2018ல் நடந்த உமேஷ் என்பவரது கொலை வழக்கு மற்றும் மூன்று கொலை முயற்சி வழக்குகள் உட்பட, ஆறு வழக்குகள் உள்ளன. தற்போது ஜாமினில் உள்ள சதீஷுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் மதகொண்டப்பள்ளியில் நேற்று முன்தினம் மாலை தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் தளி, ஜெயந்தி காலனியில் நேற்று முன்தினம் இரவு, நண்பர்களுடன் சதீஷ் மது அருந்தினார். அங்கு வந்த கும்பல் சதீஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொன்று தப்பியது. கொலை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, தளி, தேன்கனிக்கோட்டை, பேரிகை, பாகலுார், ஓசூர் டவுன், சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களில், 20 கொலைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

