/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மத்திகிரி கோவில் தேரோட்டம் 3 மாநில பக்தர்கள் தரிசனம்
/
மத்திகிரி கோவில் தேரோட்டம் 3 மாநில பக்தர்கள் தரிசனம்
மத்திகிரி கோவில் தேரோட்டம் 3 மாநில பக்தர்கள் தரிசனம்
மத்திகிரி கோவில் தேரோட்டம் 3 மாநில பக்தர்கள் தரிசனம்
ADDED : ஏப் 25, 2024 02:26 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா மற்றும் பல்லக்கு உற்சவம் கடந்த, 22ல் துவங்கியது. நேற்று முன்தினம் கூட்டுவை நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று மதியம் துவங்கியது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து, அலங்கரித்த தேரில் உற்சவ மூர்த்தி அமர வைக்கப்பட்டார். தொடர்ந்து, மிடுகரப்பள்ளியில் இருந்து, மத்திகிரி மாரியம்மன் கோவிலுக்கு, பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
ஓசூர், மிடுகரப்பள்ளி, மத்திகிரி பகுதி பக்தர்கள் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து வந்திருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்களும், அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் இன்று தின்னுார் பகுதி மக்களால் காலை, 10:00 மணிக்கு, அலகு குத்தும் நிகழ்ச்சி, மதியம், 2:45 மணிக்கு அம்மன் உற்சவம் நடக்கிறது.

