ADDED : மே 02, 2024 11:21 AM
ஓசூர்: ஓசூர், அன்பு கரங்கள் அறக்கட்டளை மற்றும் உதிரம் தன்னார்வ ரத்த கொடை அமைப்பு சார்பில், ஆண்டுதோறும் தொழிலாளர் தினமான மே, 1ல் ரத்த தான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஓசூர் ராயக்கோட்டை சாலையிலுள்ள முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 20ம் ஆண்டு ரத்த தான முகாம் நேற்று நடந்தது. ஓசூர் மாநகர மேயர் சத்யா, முகாமை துவக்கி வைத்தார்.
ரத்த தானம் செய்த இளைஞர்கள், பெண்களுக்கு, மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், சான்றிழ்களை வழங்கி கவுரவித்தார். கிருஷ்ணகிரி, ஓசூர், திருப்பத்துார் அரசு மருத்துவமனைகள் மற்றும் இரு தனியார் ரத்த வங்கிகள் பங்கேற்று மொத்தம், 425 யூனிட் ரத்தத்தை சேகரித்தன. உதிரம் தன்னார்வ ரத்த கொடை அமைப்பை சேர்ந்த மாரியப்பன், சத்தியமூர்த்தி, பள்ளி தலைமையாசிரியர் காந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மகேஷ்பாபு, தி.மு.க., பகுதி செயலாளர் ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.

