/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போர்வெல் அமைக்க எம்.எல்.ஏ., பூமி பூஜை
/
போர்வெல் அமைக்க எம்.எல்.ஏ., பூமி பூஜை
ADDED : ஆக 10, 2024 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், கலுகொண்டப்பள்ளி பஞ்.,ல், குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. அதை சமாளிக்கும் வகையில், தளி இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய போர்வெல் அமைக்க, 3 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, பெட்டத்தம்மா கோவில் அருகே போர்வெல் அமைக்கும் பணியை, தளி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து நேற்று துவக்கி வைத்தார். பி.டி.ஓ., சீனிவாசமூர்த்தி, கலுகொண்டப்பள்ளி முன்னாள் பஞ்., தலைவர் கிருஷ்ணப்பா, இ.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் சிவசங்கரன், ஒன்றிய கவுன்சிலர் பிரசாந்த் உட்பட பலர்