/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலையில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் தவிப்பு
/
சாலையில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : செப் 08, 2024 01:17 AM
சாலையில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் தவிப்பு
ஓசூர், செப். 8-
ஓசூரில் நேற்று மதியம், 3:15 மணிக்கு மேல், அரை மணி நேரம் கனமழை கொட்டியது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக, ஓசூர் பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள சர்வீஸ் சாலை, ராயக்கோட்டை சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் மழைநீருடன் கழிவு நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதியடைந்தனர்.
பஸ் ஸ்டாண்ட் முன் மழைநீர் வெளியேற வழி இல்லாததால், குட்டை போல் தேங்கிய நீரில் பயணிகள் நடந்து சென்று, ஓசூர் பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறி சென்றனர். நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஓசூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் மாலை நேரத்தில் வீடுகளில் இருந்து வெளியே வந்திருந்தனர். திடீர் மழையால் சற்று சிரமத்திற்கு ஆளாகினர். இந்த மழையால், ஓசூரில் நேற்று மாலை குளிர்ந்த காற்று வீசிய வண்ணம் இருந்தது.