/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் 3 பேரை கொல்ல முயன்ற 4 பேருக்கு வலை
/
ஓசூரில் 3 பேரை கொல்ல முயன்ற 4 பேருக்கு வலை
ADDED : மே 16, 2024 02:08 AM
ஓசூர்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சென்னசமுத்திரத்தைச் சேர்ந்த நண்பர்கள் இளங்கோ, 35, மற்றும் ரவி, 34. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்தம் அக்ரஹாரத்தில் ரவி வசிக்கிறார்.
இவரது நண்பர், ஓசூர் விகாஸ் நகரில் வசிக்கும், தர்மபுரி மாவட்டம், புட்டிரெட்டிபட்டியை சேர்ந்த வினோத், 24. இவர்கள் மூவரும், நேற்று முன்தினம் இரவு, 8:45 மணிக்கு, ஓசூர் பஸ் ஸ்டாண்டிற்கு பைக்கில் வந்தனர்.
திருவண்ணாமலை பஸ் நிற்கும் பிளாட்பாரத்தில் பைக்கை நிறுத்தியபோது, நான்கு பேர் கொண்ட கும்பலுடன் தகராறு ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறிய நிலையில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
ஆத்திரமடைந்த, நான்கு பேர் கொண்ட கும்பல், தங்களிடமிருந்த கத்தி போன்ற ஆயுதங்களால், இளங்கோ, ரவி, வினோத் ஆகிய மூவரையும் தலையில் தாக்கியது.
இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய, மூவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், ஓசூர் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு ஆபத்தான நிலையில், மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓசூர் டவுன் போலீசார், பஸ் ஸ்டாண்டிலுள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து, நான்கு பேர் கும்பலை தேடி வருகின்றனர்.