/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பில் இல்லை, தள்ளுபடி இல்லை கிருஷ்ணகிரி கூட்டுறவு மருந்தகங்கள் முறைப்படுத்தப்படுமா?
/
பில் இல்லை, தள்ளுபடி இல்லை கிருஷ்ணகிரி கூட்டுறவு மருந்தகங்கள் முறைப்படுத்தப்படுமா?
பில் இல்லை, தள்ளுபடி இல்லை கிருஷ்ணகிரி கூட்டுறவு மருந்தகங்கள் முறைப்படுத்தப்படுமா?
பில் இல்லை, தள்ளுபடி இல்லை கிருஷ்ணகிரி கூட்டுறவு மருந்தகங்கள் முறைப்படுத்தப்படுமா?
ADDED : ஆக 17, 2024 04:05 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் கூட்டுறவு மருந்தகங்களில் பில் கொடுக்காமலும், உரிய தள்ளுபடியும் கொடுப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏழை, எளிய மக்களும் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு, 20 சதவித தள்ளுபடியில் மருந்து மாத்திரைகளை வழங்க கூட்டுறவு மருந்தகங்கள் தொடங்கப்பட்டு, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் செயல்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி நகரில் உழவர் சந்தை அருகிலும், சேலம் சாலை, பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ராயக்கோட்டை சாலை என, 4 இடங்களிலும், ஓசூரில், இரு இடம், போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் தலா ஒரு இடத்தில் என மொத்தம், 8 இடங்களில் இந்த கூட்டுறவு மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மருந்தகங்கள் காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை செயல்படுகிறது. மருந்தகங்களில் மருந்தாளுனராக ஒருவரும், உதவியாளர் ஒருவரும் என, 2 பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மருந்தகங்களில் ஒருவர் மட்டுமே இருக்கிறார்.
இது குறித்து நோயாளிகள் கூறுகையில், 'கூட்டுறவு மருந்தகங்களில், 20 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என்பதால் மருந்துகளை வாங்க வருகிறோம். ஆனால், அந்த தள்ளுபடி இல்லாமல் பணம் வாங்குகின்றனர். அதற்கு பில் கேட்டால் இயந்திரம் பழுதாகி உள்ளதாக கூறுகின்றனர். பல மருந்துகள் அவர்களிடம் இருப்பதே இல்லை. கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலை, உழவர் சந்தை அருகிலுள்ள கூட்டுறவு மருந்தகங்கள் அடிக்கடி மூடப்படுகின்றன. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.