/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளியில் பா.ம.க., நடனம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்
/
பள்ளியில் பா.ம.க., நடனம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்
ADDED : மார் 08, 2025 12:52 AM
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், சோபனுார் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த, 4ல் ஆண்டு விழா நடந்தது. இதில் மாணவ - மாணவியரின் நடன நிகழ்ச்சியில், பா.ம.க., கட்சியின் ஆல்பத்தில் வெளியான, 'அடிங்கடா உரிமை மேளம் ராசு படையாச்சி' என்ற குத்தாட்ட பாடலுக்கு மாணவர்கள் நடனமாடினர்.
பாடலின் இடையில் ஒரு மாணவன் வீரப்பன், காடுவெட்டிக் குருவின் உருவப்படம் பொறித்த டீ சர்ட்டை எடுத்து வந்து நடனமாடிய நிலையில், அதே பாடலில், பா.ம.க., கொடியை குறிக்கும் வகையில் உள்ள மப்ளரை அணிந்து நடனமாடினர். இது, அங்கிருந்த பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், ஆண்டு விழாவில் வெளியான படையாச்சி பாடலுக்கு ஆடிய நடனம் சமூக வலைதளங்கள், ஊடகங்களில் வெளியானது.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட சி.இ.ஓ., முனிராஜி உத்தரவின்படி, டி.இ.ஓ., ராஜன் விசாரித்து அறிக்கை அளித்தார். சி.இ.ஓ., முனிராஜி, சோபனுார் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஜயகுமார், தமிழ் ஆசிரியர் சுப்பிரமணி இருவருக்கும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.