/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'தமிழகத்திலுள்ள திட்டங்களை பார்த்து செயல்படுத்த துவங்கிய பிற மாநிலங்கள்'
/
'தமிழகத்திலுள்ள திட்டங்களை பார்த்து செயல்படுத்த துவங்கிய பிற மாநிலங்கள்'
'தமிழகத்திலுள்ள திட்டங்களை பார்த்து செயல்படுத்த துவங்கிய பிற மாநிலங்கள்'
'தமிழகத்திலுள்ள திட்டங்களை பார்த்து செயல்படுத்த துவங்கிய பிற மாநிலங்கள்'
ADDED : ஏப் 18, 2024 01:32 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், காங்., வேட்பாளர், 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டுமென, கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பேசினார்.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, இண்டியா கூட்டணியின், காங்., வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து, பர்கூர், கிருஷ்ணகிரியில் பேரணி நடந்தது. இதில், கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பேசியதாவது:
நாடு போற்றும் நல்லாட்சியாக, தி.மு.க., ஆட்சி நடக்கிறது. இதை பொறுக்க முடியாத மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கிறது. நிதியை தர மறுக்கிறது. இது நாடறிந்த விஷயம். இந்த இக்கட்டான சூழலிலும், காலை உணவுத்திட்டம், இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன் திட்டம், நம்மை காக்கும், 48 திட்டம் என, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
தமிழகத்தின் திட்டங்களை பார்த்து, மற்ற மாநிலங்கள், இத்திட்டங்களை செயல்படுத்த துவங்கி விட்டன. இதை பொருக்க முடியாத மத்திய அரசு, தி.மு.க.,வை அழிக்க திட்டம் போட்டு வருகிறது. எத்தனையோ பேர், தி.மு.க.,வை அழிக்க நினைத்து அழிந்த போன வரலாறு உண்டு. அதேபோல்தான், நம்மை வீழ்த்த நினைக்கும், பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் நிலை உள்ளது. ஜாதி, மத பேதமற்ற, ஏற்றத்தாழ்வுகள் அற்ற ஆட்சி நடக்க, சமூக நீதியை நிலைநாட்ட, ஏழை குடும்பத்தினர் ஆண்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய் பெற, தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

