UPDATED : அக் 26, 2026 03:22 AM
ADDED : அக் 26, 2026 01:59 AM

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., சார்பில், இயக்கத்தின், 101 வது ஆண்டு துவக்க விழா மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, ஓசூரில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. டாக்டர் சீனிவாசகவுடா கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
மாவட்ட செயலாளர் கணேசன், இணை செயலாளர் முனிரெட்டி ஆகியோர் தலைமையில், ஓசூர் காமராஜ் காலனியில் ஊர்வலம் துவங்கி, காமராஜ் காலனியை அடைந்தது. தொடர்ந்து, அங்கு பொதுக்கூட்டம் நடந்தது.ஆர்.எஸ்.எஸ்., மாநில செயலாளர் ஜெகதீசன் பேசினார். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, ஓசூர் டி.எஸ்.பி., சுதீர், டவுன் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
* தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பாண்டுரங்கன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மூகாம்பிகை கோவிந்தராஜ், கோட்டப் பொறுப்பாளர் சந்திரசேகர், மாவட்ட இணைத்தலைவர் பத்ரிநாராயணன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் அல்லிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.எஸ்.எஸ்., வட தமிழக தலைவர் குமாரசாமி அணிவகுப்பு பேரணியை தொடங்கி வைத்து பேசினார். பிரம்மகுமாரி சமாஜ நிர்வாகி ஸ்ரீதேவி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் பொதுக்கூட்டத்தில் பேசினர். ஆர்.எஸ்.எஸ்., பேரணியை முன்னிட்டு, தர்மபுரி டவுன் பகுதியில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
