/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சர்வீஸ் சாலை அமைக்க வேண்டி பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சி
/
சர்வீஸ் சாலை அமைக்க வேண்டி பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சி
சர்வீஸ் சாலை அமைக்க வேண்டி பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சி
சர்வீஸ் சாலை அமைக்க வேண்டி பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சி
ADDED : ஜூலை 17, 2024 02:36 AM
தர்மபுரி;தர்மபுரி அருகே, கடகத்துார் பகுதி தேசிய நெடுஞ்சாலையில், சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையில் பொதுமக்கள், சாலை மறியல் செய்ய முயன்றனர்.
தர்மபுரி அடுத்த கடகத்துாரில், அதியமான்கோட்டை முதல் ஓசூர் வரையிலான, புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையில், தர்மபுரி நகர பகுதிக்கு செல்ல, சர்வீஸ் சாலை அமைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் தவித்து வந்தனர். இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள், வாகன ஒட்டிகள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், பாலக்கோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையில், பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், கடகத்துார் பிரிவு சாலை அருகே நேற்று சாலை மறியல் செய்ய முயன்றனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சர்வீஸ் சாலைக்கான பணிகளை பொக்லைன் வாகனம் மூலம் தொடங்கினர். இதனால், சாலை மறியல் முடிவை பொதுமக்கள் கைவிட்டனர்.