/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீடுகளில் இயங்கும் அரசு பள்ளி சொந்த கட்டடம் கேட்டு மறியல்
/
வீடுகளில் இயங்கும் அரசு பள்ளி சொந்த கட்டடம் கேட்டு மறியல்
வீடுகளில் இயங்கும் அரசு பள்ளி சொந்த கட்டடம் கேட்டு மறியல்
வீடுகளில் இயங்கும் அரசு பள்ளி சொந்த கட்டடம் கேட்டு மறியல்
ADDED : ஆக 07, 2024 08:57 AM
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், கிரியானப்பள்ளியில், அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 75 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இரு ஆண்டுகளுக்கு முன், பள்ளியின் ஓடு கட்டடம் சேதமானது.
மேலும், சுவர் இடிந்ததால் கழிப்பறையையும் பயன்படுத்த முடியாமல் மாணவியர் அவதி அடைந்தனர். இதனால், கடந்த இரு ஆண்டுகளாக அப்பகுதியிலுள்ள வீடுகளின் வராண்டாக்களில் மாணவ - மாணவியருக்கு பாடம் நடத்தப்படுகிறது.
பள்ளிக்கு சொந்த கட்டடம் கேட்டு பெற்றோர் கோரிக்கை விடுத்தும், மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை கண்டுகொள்ளவில்லை. இதனால் நேற்று காலை, 10:00 மணிக்கு மாணவ - மாணவியர், 50க்கும் மேற்பட்டோர், வகுப்புகளை புறக்கணித்து மறியல் செய்தனர்.
தேன்கனிக்கோட்டை தாசில்தார் பரிமேலழகர், டி.எஸ்.பி., சாந்தி பேச்சு நடத்தி, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மறியலை கைவிட்டு, காலை, 11:30 மணிக்கு பின் மாணவ - மாணவியர் பள்ளிக்கு சென்றனர்.