ADDED : பிப் 27, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர், 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது மாணவி. இவரை, கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி பனந்தோப்பைச் சேர்ந்த ஹரீஷ், 21, என்ற வாலிபர், காதலிக்கக் கூறி, தொல்லை கொடுத்து வந்தார்.
மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி நேற்று, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிந்து, ஹரிஷை தேடி வருகின்றனர்.