இந்தியா உடனான உறவை முறிக்கக்கூடாது: டிரம்புக்கு நிக்கி ஹாலே அறிவுரை
இந்தியா உடனான உறவை முறிக்கக்கூடாது: டிரம்புக்கு நிக்கி ஹாலே அறிவுரை
ADDED : ஆக 05, 2025 10:28 PM

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு விலக்கு அளித்து, இந்தியா போன்ற வலுவான நட்பு நாடுகளுடனான உறவை முறித்துக் கொள்ளக்கூடாது,'' என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கூறியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்தார். அவரால் முடியாத காரணத்தினால், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது வர்த்தக ரீதியில் வரியை உயர்த்தி வருகிறார். இதனை ஏற்க முடியாது என இந்தியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் தெற்கு கரோலினா மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான நிக்கி ஹாலே வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது. ஆனால், ரஷ்யா மற்றும் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனா, 90 நாட்கள் விலக்கைப் பெற்றது. சீனாவுக்கு அனுமதி அளித்து, இந்தியா போன்ற வலுவான நட்பு நாடுடனான உறவை முறித்துக் கொள்ளாதீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.